இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பெருந்தொற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கிய தொகுப்பு வழங்கப்பட்டது
நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நாமக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் ஆரோக்கிய தொகுப்பை நாமக்கல் செயலாளர் C.R.இராஜேஷ் கண்ணன் வழங்கினார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானா பெருந்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறும்நபர்களுக்கு ரெட்கிராஸ் சார்பாக துண்டு, சோப் ,பெட்டி, பற்பசை, பல் துலக்கும் பிரஷ், 100 மி. லி சானிடைசர் ,இரண்டு அடுக்கு துணி முக கவசம் அடங்கிய நிவாரண ஆரோக்கிய தொகுப்பை நாமக்கல் கோட்டாட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நிவாரண ஆரோக்கிய தொகுப்பை சித்த மருத்துவர் பூபதி ராஜா
அவர்களிடம் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment