முக்கிய செய்தி நாமக்கல் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறக்க கூடாது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 
மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களுக்கு முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இன்று 21/05/2021 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இதில் மளிகை மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்  கலந்துகொண்டனர். இதுகுறித்து பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
இன்று 21/05/2021 மாலை 4 மணியளவில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் மற்றும் நாமக்கல் நகராட்சி ஆணையர் திரு.பொன்னம்பலம் ஆகியோர் மளிகை மற்றும் காய்கறி வியாபாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டதில் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

1. நாமக்கல் மாவட்ட முழுக்க உள்ள அனைத்து மளிகை மற்றும் காய்கறி கடைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக அடைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும். டோர் டெலிவரி செய்ய விருப்பம் உள்ள மளிகை கடை உரிமையாளர்கள், அதற்கான முறையான அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி பாஸ் ஆகியவற்றை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

2. மளிகை பொருள் மொத்த விற்பனையாளர்கள் ஆர்டர் பெற்ற பொருட்களை சில்லரை வணிகர்களின் இடத்திற்கே சென்று தர வேண்டும்.அதற்கான வாகன அனுமதியையும் நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

3. நாமக்கல் நகரில் காய்கறி மொத்த விற்பனை நல்லிபாளையம் அரசு மேனிலை பள்ளியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும்.

4. காய்கறி சில்லரை விற்பனை, நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலம் மட்டுமே காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்தந்த பகுதிகளில் நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

5. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை (24.05.2021) முதல் அமலுக்கு வருகிறது.

5. கட்டுப்பாடுகளை மீறுவோர் பற்றி புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரத்தியேக வாட்ஸப் எண்🪀 வழங்கப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த கட்டுப்பாடுகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா பரவுதலை தடுக்க வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத்தின் தலைவர் திரு.ஜெயகுமார் வெள்ளையன் அவர்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைத்து தெளிவு பெறலாம்
98437 98438

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்