தன்னார்வலர்கள் குழுவைக் கௌரவித்த நாமக்கல் லாரி ஓனர்

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கொரோனா தொற்றுக் காலத்தில், தன்னுடைய நலன் பாராமல் எளியோரின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் 
தன்னலார்வலர்களின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளார் நாமக்கல் ரத்னகலா லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் துரைசாமி அவர்கள்


 நாமக்கல் தன்னலார்வர்கள் குழுவில் உள்ள சுமார் ஐம்பது இருசக்கர வாகனங்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும் நாமக்கல் நளா ஹோட்டல் சார்பில் தினந்தோறும் இருவேளை டீ, காபி உளுந்தகஞ்சி வழங்கி வருகின்றனர்

நாடெங்கிலும் நோய்த் தொற்று அதிகமானது. சமூக இடைவெளி மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என எச்சரித்த மத்திய அரசு நோய் மேன்மேலும் பரவாமல் இருக்க  பொது ஊரடங்கினை தமிழக அரசு  அமல்படுத்த்தி உள்ளது.  திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் எளிய மக்களின் அன்றாடத் தேவைகள் முடக்கப்பட்டது.



இவ்வேளையில், சாலையோர முதியோர்கள், பேருந்து நிலையங்களில் வசிப்போர்கள், அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள், வட மாநிலத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், கோவிலில் படுத்துறங்கும் சாமியார்கள் அவர்களுக்குத் தேவையான மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்க நாமக்கல் நகரை சார்ந்த   தன்னார்வலர்கள் சேவை செய்து வருகின்றனர்.

 "எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பெருந்தொற்று காலத்தில் களத்தில் இறங்கி. எளிய மக்களின் அன்றாட  தேவைகளைத் தீர்த்து வருகிற  தன்னார்வலர்களின் செயல் பாராட்டுக்குரியது. 

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்