நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நேர்காணல் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக அளவிலான நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக அத்தியாவசிய தேவையினை கருத்தில் கொண்டு கூடுதல் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பாரா மெடிக்கல் பணியாளர்களை தேவைக்கேற்ப தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திட
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை,
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை,
ராசிபுரம் அரசு மருத்துவமனை,
குமாரபாளையம் அரசு மருத்துவமனை
ஆகிய இடங்களில் 27.05.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே தகுதியுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்படுகிறது.
மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி MBBS from Medical Colleges recognized Medical Council and Duly Registered with TNMC ஆகும்.
அலுவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.60,000/- ஆகும்.
செவிலியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி DGNM or B.Sc., Nursing with Nursing Council Registration ஆகும். செவிலியர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.14,000/ ஆகும்.
நுண்கதிர் படப்பிடிப்பாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி DRDT Certificate course ஆகும். ஆய்வக நுட்புனர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி +12 with DMLT certificate ஆகும். பலநோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்சசி மற்றும் தமிழில் தப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
நுண்கதிர் படப்பிடிப்பாளர், ஆய்வக நுட்புனர் மற்றும் பலநோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசு விதிகளின்படி தொகுப்பூதியம் வழங்கப்படும்.
மேற்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும். எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது பணியில் சேருவதற்கான சுயவிருப்பு ஒப்புதல் (Undertaking) கடிதம் அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் எந்த இடத்தில் பணியமர்த்தனாலும் பணிபுரிய வேண்டும்.என நாமக்கல்
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment