முன்கள பணியாளர்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் முட்டை வழங்கினார்
நாமக்கல் நகராட்சியில் இன்று காலை 10 மணி அளவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முட்டை வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சுமார் 700 முன்கள பணியாளர்களுக்கு முட்டை அட்டைகளை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் அவர்கள் வழங்கினார்.
அவருடன் நாமக்கல் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் திமுக மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், நகர பொறுப்பாளர்கள் ராணா ஆனந்த், பூபதி ,பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், சரவணன், மூர்த்தி, மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பாலாஜி கலந்துகொண்டனர்.
மொத்தம் 21000 முட்டைகளை முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment