நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்; போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனாவின்🦠 தாக்கம் குறையாத காரணத்தால் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், பால் வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தோட்டக்கலைத்துறை மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு அருகே கொண்டு சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே தேவையின்றி சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 

மேலும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பு, தேவைகள், தகவல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் நாமக்கல் மாவட்ட காவல் துறையின் உதவி மைய எண்கள்99947 17110 மற்றும்
98945 15110 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த எண்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்