Posts

Showing posts from April, 2020

தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா Active Case பற்றிய விபரம்

Image
30.4.2020 வரை மாவட்ட வாரியாக உள்ள கொரோனா Active Cases தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக உள்ள Active Cases: சென்னை: 542 மதுரை: 37 தென்காசி: 33 செங்கல்பட்டு: 28 விழுப்புரம்: 25 திருவள்ளூர்: 24 தஞ்சாவூர்: 22 திருப்பூர்: 21 கோவை: 19 விருதுநகர்: 16 திருவாரூர்: 15 திண்டுக்கல்: 13 காஞ்சிபுரம்: 13 நாகைப்பட்டினம்: 13 நாமக்கல்: 12 சேலம்: 11 திருநெல்வேலி: 10 கடலூர்: 08 வேலூர்: 07 ராணிப்பேட்டை: 06 கள்ளக்குறிச்சி: 06 திருச்சி: 06 பெரம்பலூர்: 06 தேனி: 06 கன்னியாகுமரி: 06 திருவண்ணாமலை: 05 ராமநாதபுரம்: 05 அரியலூர்: 02 சிவகங்கை: 02 திருப்பத்தூர்: 01 தருமபுரி: 01 கரூர்: 00 புதுக்கோட்டை: 01 கிருஷ்ணகிரி: 00 ஈரோடு: 00 நீலகிரி: 00 தூத்துக்குடி: 00

விலையைக் கூட்டி விற்பனை செய்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட - தமிழ்நாடு வணிகர் சங்கம்

Image
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் அத்தியாவசிய பொருட்களான  அரிசி பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் காய்கறிகள் போன்றவைகளை விலையை கூட்டி விற்பனை செய்யப்படுவதாலும் மற்றும் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காமல் விற்பனை செய்வதாலும் பல கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர்கள் சீல் வைக்கும் நிகழ்வு தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு நாமக்கல் மாவட்டத்தில் கையிருப்பு உள்ளதாகவும் இது போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை கூட்டி விற்றால் சங்கங்கள் வணிகர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேலும் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் மக்களை சமூக இடைவெளியை கண்காணிக்கும் படி அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கால்நடை வளர்ப்போருக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

Image
நடமாடும் சிறப்பு கால்நடை மருத்துவ குழுக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்குத் தேவையான சினை ஊசி மற்றும் அவசர சிகிச்சை வழங்குவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை நாமக்கல் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு நடமாடும் கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் வட்டார கால்நடை வளர்ப்போர் 9445032640 என்ற அலைபேசி எண்ணிலும் நாமகிரிப்பேட்டை வெண்ணந்தூர் ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் வட்டார கால்நடை வளர்ப்போர் 9445032680 என்ற தொலைபேசி எண்ணிலும் திருச்செங்கோடு கபிலர்மலை பரமத்தி எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் மற்றும் பள்ளிபாளையம் வட்டார கால்நடை வளர்ப்போர் 94450332641என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இந்த சேவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவே கால்நடை வளர்ப்பும் இதன் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  24 மணி நேர தேவைக்கு நாமக்கல் மாவ...

நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று

Image
நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று. நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் போதுபட்டி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை 61 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 49 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்திற்க்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கமணி

Image
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் அதிரடி                             ஏப்ரல் 28 நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இருவர் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.  நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 55 ககொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 14 நபர் மட்டுமே தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ள நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்தார். தற்போதுள்ள 14 நபர்களுக்...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 நபர்களுக்கு கொரோனா தொற்று

Image
நாமக்கல்லில் இன்று 26.04.2020 மட்டும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாமக்கல்லில் இதுவரை 59 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 14 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 4 பேரும் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகர மக்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட கண்காணிப்புக்குழு

Image
கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குநர் திரு.அசோக்குமார் அவர்கள் அம்மா உணவகத்தை திடீரென ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அம்மா உணவகத்தில் உணவருந்திய பிறகு தட்டுகளை வெந்நீர்ல் சுத்தம் செய்ய ₹2.50 லட்சம் மதிப்பிலான சுத்தம் செய்யும் கருவி வழங்கப்படும் என தெரிவித்தார் . திருச்செங்கோடு நகரப் பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஸ்பிரேயர்கள் வாங்க உள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காலை முதல் மக்கள் உணவிற்காக மிக நீண்ட வரிசையில் நெடு நேரம் சமூக இடைவெளியின்றி உணவிற்காக காத்து நின்றனர் இதனால் உணவு வழங்கப்படும் பொழுது தட்டுகள் சரியானபடி கழுவாமல் மற்றும் வெந்நீர் வசதி இல்லாததால் குளிர்ந்த நீரில் கழுவப்படும் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. இந்த நாள் ஒருவரிடம் இருந்து மற்றொருவர...

சமூக சேவை குழுவின் சார்பில் வனவிலங்குகளுக்கு உணவளிப்பு

Image
பட்டிகாட்டு பசுமை பட்டறை குழுவின் சார்பில் விலங்குகள் மற்றும் மரங்களுக்கு உணவு அளிக்கப்பட்டது நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை மற்றும் விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்துவரும் பட்டிக்காட்டுப் பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி மலைமேல் உள்ள விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு அரிசி கம்பு போன்ற தானியங்களை வைத்தனர் மேலும் அங்கு அக்குழு உறுப்பினர்களால் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு நீர் விடப்பட்டது.  மேலும் இது கோடைகாலம் என்பதால் அப்பகுதியில் அந்தக் குழுவின் சார்பில் செயற்கையாக அமைக்கப்பட்ட குளத்தில் நீர் அதிகமாக ஆவியாகி செல்வதால் அவற்றை தடுக்கும் விதமாக துணிகளைக் கொண்டு சூரிய ஒளி நீரின் மீது படாதவாறு பழைய துணிகளை வைத்து கட்டினர் இதன் மூலம் தினசரி நீர் ஆவியாவது பாதியளவு குறையும் என இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மீன்கள் விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு நீராதாரமாக செயல்படும் இந்த செயற்கை குளமானது தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீர்மட்டத்தின் அளவு படிப்படியாக குற...

இந்த முழு ஊரடங்கின் போது செயல்படுபவை

Image
இந்த முழு ஊரடங்கின் பொழுது செயல்படுபவை 1.பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி 2.மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி 3.தலைமைச்செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் 4.மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி 5.கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் 6.பெட்ரோல் பங்குகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி 7.தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி 8.ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சி, அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் இயங்கும்

கொரோனா வைரஸ் பற்றிய updateகளை உடனுக்குடன் வழங்கும் மூன்று தலைசிறந்த இனையதளங்கள்

Image
கொரோனா Update பற்றி உடனுக்குடன் தெரிவிக்கும் தலைசிறந்த இனைய தளங்கள் 1.இந்தியா மற்றும் இந்திய மாநிலங்களில் உள்ளள கொரோனா update-ற்க்கு https://coronabharat.com / 2.இந்தியா முழுவதும் உள்ள கொரோனா update-ற்க்கு https://www.covid19india.org/ 3.உலக நாடுகளில் உள்ள கொரோனா update-ற்க்கு country Wise https://www.worldometers.info/coronavirus/#countries https://www.covidvisualizer.com/

கொரோனா பாதித்தவருக்கு காய்ச்சல் மாத்திரை விற்ற மருந்தகத்திற்கு சீல் வைப்பு

Image
காளப்பநாயக்கன்பட்டி மருந்தகத்திற்கு சீல் வைத்த வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இவர் தன் கர்ப்பமாக உள்ள மனைவியை பார்க்க சென்னை போரூரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவை இரண்டு சக்கர வாகனத்தில் கடந்து வீடு வந்தடைந்துள்ளார்.  இந்நிலையில் இவர் மனைவியை அழைத்துச் சென்று கொண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஸ்கேன் மையமான நாமக்கல் ஸ்கேன் சென்டரில் தனது மனைவியை  நார்மல் செக்கப் செய்துள்ளார்.  பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் காய்ச்சலுக்கு மருந்து வாங்கியுள்ளார் இருப்பினும் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து அதன் காரணமாக பேளுக்குறிச்சி சுகாதார நிலையம் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார் இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று சேலம் தனியார் மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இவர் தற்போது சேலம் அரசு  மருத்துவக் கல்லூரியில் மரு...

கண்டம் தெறிவித்த நெட்டிசன்கள்

Image
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மளிகை பொருட்களை வழங்கிய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் நாமக்கல்லில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி பகுதிகளில் நாமக்கல் நகரத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நகரமாக மாற்ற பாடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களின் தலைமையில் உணவிற்கு தேவையான இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்த மளிகைப் பொருட்களில் அரிசி சர்க்கரை துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்று கழக உறுப்பினர் மற்றும் கட்சி சார்பில் வழங்கப்பட்டது. இதில் 440க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்நிலையில் உணவு பொருட்கள் வழங்கும் சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் சரியானபடி சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. மேலும் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி வரும் கட்சி உறுப்பினர்களும் சரியாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உணவுப் பொருட்களை வழங்கினர். தூய்மைப் பணியாளர்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசையாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தனர் ஆனால...

நாளை முதல் நாமக்கல் மாவட்டத்தில் கெடுபிடி அதிகரிப்பு

Image
தடையை மீறுபவர்கள் கட்டாய  அபராதம் நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் முக கவசம் அணிவது கட்டாயம், முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம், இருச்சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவு. காளப்பநாயக்கன்பட்டியில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டது ஆகையால் இந்த நிமிடத்திலிருந்து காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிலையத்திற்கோ அல்லது வெளியில் சுற்றவோ வேண்டாம் மீறி சுற்றினால் காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காளப்பநாயக்கன்பட்டி அம்மன் சூப்பர்மார்கெட் அருகில் உள்ள இரண்டு தெருக்களும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது இருப்பினும் இதுவரை 39 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 11 நபர்கள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அந்த 11 நபர்கள் சேர்ந்து ஒருவர் கூடுதலாக 12 நபர் சிகிச்சை பெற்ற...

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 33 பேர் டிஸ்சார்ஜ். (20.04.2020)

Image
நாமக்கல்லைச் சேர்ந்த 33 பேர் டிஸ்சார்ஜ். (20.04.2020) கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 நபர்கள்  இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். டிஸ்சார்ஜ்  செய்யப்பட்ட அனைவரும்  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வாகனங்கள் மூலம் இன்று நாமக்கல்லில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர்.  முதல்கட்டமாக 6 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். அதேபோல் இன்று 33 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றனர் மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளில் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சியக்கிறது என மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ள 11 நபர்களை குணப்படுத்தும் முயற்சியில் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவலர் மற்றும் அமைச்சர் தங்கமணி...

பட்டிக்காட்டு பசுமை பட்டறை குழுவின் சார்பில் வனவிலங்குகளுக்கு உணவளிப்பு

Image
சமூக சேவை குழுவின் சார்பில் சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகளுக்கு நீர் விட்டனர் நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நலன் இயற்கை மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பில் தொடர்ந்து அக்கறை செலுத்திவரும் சமூக சேவை குழுவான பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழு இன்று தனது சேவையை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தனது சேவையினை நிறுத்தி வைத்திருந்த இந்த சமூக சேவை குழு தற்போது மீண்டும் தனது சேவையை தன் கையில் எடுத்துள்ளது மேலும் இது விடுமுறை நாள் என்பதால் இந்த நாட்களில் தங்களது வேலை நேரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை பயன்படுத்தப்பட்ட வேலை நேரங்களை விட இம்முறை அதிக நாட்கள் மற்றும் வேலை நேரங்களை அதிகரிக்க இக் குழு திட்டமிட்டுள்ளது இந்நிலையில் இன்று மலைமேல் இவர்களால் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு சமூக சேவை குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட செயற்கை குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டு இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் நடப்பட்ட மரக் க...

திருச்செங்கோட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவின்படி இலவசம் மளிகை பொருட்கள்

Image
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச மூலிகை பொருட்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தமிழகம் மற்றும் நாமக்கல் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற பகுதியில் தமிழக முதல்வர் அறிவித்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசியும், சர்க்கரை, பருப்புக்களை திருச்செங்கோடு புள்ளிகார்மில்ஸ் தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி அவர்கள் தொழிலாளர்களுக்கு  வழங்கினர். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் பலர் தாமாகவே முன்வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தனர்.  இந்த ஓவியத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன அந்த வாக்கியம் என்னவென்றால் விழிப்புடன் இரு வீட்டிலேயே இரு மற்றும் தேவையற்ற பயணங்களைத் ரத்து...

வீடு வீடாக சென்று கிருமிநாசினி பொருட்களை வழங்கிய சுகாதாரத் துறையினர்

Image
நாமக்கல் மாவட்டம் சார்பில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் நாமக்கல்லில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான மஜித் தெருவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சுகாதார துறையினர் வீடு வீடாகச் சென்று கிருமிநாசினி பொருட்களை வழங்கினார் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்த வண்டிகள் மேற்கண்ட படிவம் மூலமாக உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவு

Image
வாகனத்தை பெற மாதிரி படிவம் ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறையின் அறிவிப்பு 24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவைப்படின் அதிகப்படியாக ஒருமணி வரை இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும் 24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு  எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும்  அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள்  அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெ...

மாவட்டம் முழுவதும் இளைஞர்களால் வரையப்பட்ட பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம்

Image
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட ஓவியத்தினை வரைந்துள்ளனர்.  1.ராசிபுரம் 2.நாமக்கல் சேலம் சாலை 3.வேலக்கவுண்டம்பட்டி

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மஜித் தெருக்களுக்கு நகராட்சியால் காய்கறிகள் விநியோகம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு நாமக்கல் மாவட்ட நகராட்சி சார்பில் காய்கறிகள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.பி.பாஸ்கர் அவர்களின் தலைமையில் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு தினந்தோறும் காய்கறிகள் முட்டை பால் பாக்கெட்டுகள் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவசியமற்ற பயணங்களை ரத்து செய்யுமாறும். வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுரை வழங்கப்பட்டது.

டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்கள்

Image
திருச்செங்கோட்டில் ஊள்ள டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து திருச்செங்கோடு நகர பகுதியில் உள்ள மினி ஆட்டோ, பயணிகள் ஆட்டோ, சுற்றுலா வேன்,  ஓட்டுனர்கள் 290 நபர்களுக்கு.  தலா 15 கிலோ அரிசி, ரொக்கம் ரூ 500 மற்றும்   30 முட்டைகள் பொருட்களை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வழங்கினார்.

இந்த ஊரடங்கு காலத்தில் என்னென்ன இயங்கும்? எந்தெந்த சேவைகள் கிடைக்காது? மத்திய அரசு புது அறிவிப்பு

Image
என்னென்ன இயங்கும் ? எந்தெந்த சேவைகள் கிடைக்காது ? மத்திய அரசு புது அறிவிப்பு மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. 1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது 2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது 3. மாநிலங்களுக்கிடையே , மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 4. சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து , பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது 5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது 6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும் 7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது 8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது 9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை 1. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி 2. கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை. 3....