முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் புதிய கட்டுப்பாடுகள் நாமக்கல் மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இவை முதல் கட்டமாக நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் தெரிவித்துள்ளார்! ஜெயகுமார் வெள்ளையன் மாவட்ட தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்.
இது வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை. 1. முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். (கண்டிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் போகவே கூடாது) 2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது இரட்டை முகமூடி மற்றும் எந்த நேரத்திலும் முகமூடியை வெளியே வைத்து கழற்றவோ தாடிக்கு மட்டும் பயன் படுத்தவோ கூடாது. 3. உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிட வேண்டாம். 4.உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு குறைந்தது இரண்டு அ மூன்று மாதங்களுக்கு செல்லவே வேண்டாம். இது மிகவும் முக்கியம் இதை இந்தியாவில் மக்கள் மிகவும் இலகுவாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் முன்னெச்சரிக்கைகள் எடுக்காவிட்டால் நமது மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அழிக்கப்படுவார்கள். கோவிட் பாகுபாடு காட்டவில்லை. 5. தயவுசெய்து சொல்வதை கேளுங்கள். மரண வீட்டிற்கு செல்வதும், திருமண வீட்டிற்கு செல்வதும் அறவே தவிர்த்து விடுங்கள் அதன் மூலம் கோவிட் செயினை அறுத்துவிடலாம். நீங்கள் இதனை உதாசீனபடுத்தினால் நெருங்கிவரும் நாட்களில் தினசரி மரணம் தமிழ்நாட்டில் 500, 1000 என்று கட்டுக்கடங்காத நிலையில் அதி...
நாமக்கல்லில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பஸ் நிலையம் அருகே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதன் உருவப்படம் சாலையில் வரையப்பட்டது. இந்த பணியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர்கள் சுமார் 20 பேர் ஈடுபட்டனர். அதில் முககவசம் அணிவோம், தடுப்பூசி போட்டு கொள்வோம், கொரோனாவை ஒழிப்போம் என்ற வாசகமும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகமும் இடம் பெற்று இருந்தன. இதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு எமதர்மன் கொரோனா வடிவில் வருவது போன்றும், சேலம் ரோடு கார்னர் பகுதியிலும் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு இருந்தது. இதுதவிர ஆங்காங்கே சாலையில் முககவச படமும் வரையப்பட்டு இருந்தது.
Comments
Post a Comment