கொமாரபாளையம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று அனுமதி சீட்டு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி பகுதியை அடுத்த கொமாராபாளையம் கிராமத்தில் தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதற்கான அனுமதி சீட்டினை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மு.சிலம்பரசன் அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் விநியோகித்தார்.
மேலும் அவசியமற்ற பயணங்களை ரத்துச் செய்யுமாறும் வீட்டின் உள்ளே பாதுகாப்பாக இருக்கும்படியும், பொருட்களை வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படியும் அறிவுரை வழங்கினார்.
Comments
Post a Comment