பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் முற்றிலும் முடக்கம்
கடந்த வாரத்தில் பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய இரண்டு பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டதால் அப்பகுதியிணை சுகாதாரத்துறையினர் முற்றிலும் மூடி சீல் வைத்தனர்.
இந்நிலையில் இந்த நோய் தொற்று மற்றவருக்கு பரவாமல் இருக்க இந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்க வரும் மக்கள் மட்டுமே பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று வந்ததால் தற்போது அந்த வங்கியும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளது.
Comments
Post a Comment