திருச்செங்கோட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவின்படி இலவசம் மளிகை பொருட்கள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச மூலிகை பொருட்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தமிழகம் மற்றும் நாமக்கல் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் பலர் தாமாகவே முன்வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தனர்.
இந்த ஓவியத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன அந்த வாக்கியம் என்னவென்றால் விழிப்புடன் இரு வீட்டிலேயே இரு மற்றும் தேவையற்ற பயணங்களைத் ரத்து செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு பொன் சரஸ்வதி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு நகராட்சி கொரோனா வைரஸ் இல்லாத நகராட்சியாக மாற்ற பாடுபடும் மருத்துவர்கள் காவல்துறையினர் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களின் காலில் மலர் தூவி பாதம் தொட்டு வணங்கினார்.
மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கொரோனா வைரஸ் எனும் அரக்கனை நம் நகரில் இருந்து விரட்ட பாடுபட வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் இந்த செயல்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது கட்சி உறுப்பினர்கள் பலர் மற்றும் காவல் துறையினர் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment