சமூக சேவை குழுவின் சார்பில் வனவிலங்குகளுக்கு உணவளிப்பு
பட்டிகாட்டு பசுமை பட்டறை குழுவின் சார்பில் விலங்குகள் மற்றும் மரங்களுக்கு உணவு அளிக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை மற்றும் விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்துவரும் பட்டிக்காட்டுப் பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழு இன்று சமூக இடைவெளியை பின்பற்றி மலைமேல் உள்ள விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு அரிசி கம்பு போன்ற தானியங்களை வைத்தனர் மேலும் அங்கு அக்குழு உறுப்பினர்களால் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு நீர் விடப்பட்டது.
மேலும் இது கோடைகாலம் என்பதால் அப்பகுதியில் அந்தக் குழுவின் சார்பில் செயற்கையாக அமைக்கப்பட்ட குளத்தில் நீர் அதிகமாக ஆவியாகி செல்வதால் அவற்றை தடுக்கும் விதமாக துணிகளைக் கொண்டு சூரிய ஒளி நீரின் மீது படாதவாறு பழைய துணிகளை வைத்து கட்டினர் இதன் மூலம் தினசரி நீர் ஆவியாவது பாதியளவு குறையும் என இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மீன்கள் விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு நீராதாரமாக செயல்படும் இந்த செயற்கை குளமானது தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீர்மட்டத்தின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் மலைமேல் மற்றும் காட்டுப் பகுதியில் வசிக்கும் விலங்குகளின் நீர் தேவை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தக் குழுவின் இந்த துரித செயல் பாராட்டுக்குரியதாக உள்ளது. இப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழை அளவானது மிகவும் குறைவாக இருந்ததால் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த குழுவின் மூலம் புதிதாக மலைமேல் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த செயற்கை குளமானது நீர் முழுவதுமாக வற்றிப் போனால் இந்த மரக்கன்றுகள் காய்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment