கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இனி இறைச்சி கடைகளை நடத்தலாம் நாமக்கல் கோட்டாட்சியர்
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இனி இறைச்சிக் கடைகளை நடத்தலாம்
நாமக்கல் வருவாய் கோட்டத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் சேந்தமங்கலம் கொல்லிமலை மற்றும் மோகனூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கும் பொழுது கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படவில்லை என்பதால் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் தற்காலிக தடை செய்து உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்ய உள்ள தடைகளை நீக்கம் செய்து தருமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பட்டன மேற்படி பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று நாமக்கல் வருவாய் கோட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு ஏற்கனவே பார்வை ஒன்றில் இவ்வாறாக செயல்முறை ஆனைக்கல் படி விதிக்கப்பட்ட தடை உத்தரவு 08.04.2020 ம் தேதி முதல் நீக்கம் செய்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.
மேலும் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை செய்துவரும் கடைகளை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தினை தேர்வு செய்து அப்பகுதியில் இறைச்சி கடைகளை நடத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் உத்தரவிடப்படுகிறது. மேலும் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை விற்பனை செய்யும் கடைகளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இறைச்சிக் கடைகள் வைத்து நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மேற்படி கடைகளில் இறைச்சி வாங்கும்பொழுது சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு இறைச்சிக் கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறது.
சமூக இடைவெளியை உறுதிசெய்வது இறைச்சி கடை உரிமையாளர்கள் பொறுப்பாகும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 11 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் சமூக இடைவெளி பொதுமக்கள் கடைப்பிடிக்கப்படுவது சமூக இடைவெளி குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்குமாறு இருக்கும் மேலும் இதனை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 8ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment