பட்டிக்காட்டு பசுமை பட்டறை குழுவின் சார்பில் வனவிலங்குகளுக்கு உணவளிப்பு
சமூக சேவை குழுவின் சார்பில் சமூக இடைவெளியுடன் மரக்கன்றுகளுக்கு நீர் விட்டனர்
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நலன் இயற்கை மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பில் தொடர்ந்து அக்கறை செலுத்திவரும் சமூக சேவை குழுவான பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழு இன்று தனது சேவையை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தனது சேவையினை நிறுத்தி வைத்திருந்த இந்த சமூக சேவை குழு தற்போது மீண்டும் தனது சேவையை தன் கையில் எடுத்துள்ளது மேலும் இது விடுமுறை நாள் என்பதால் இந்த நாட்களில் தங்களது வேலை நேரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த முறை பயன்படுத்தப்பட்ட வேலை நேரங்களை விட இம்முறை அதிக நாட்கள் மற்றும் வேலை நேரங்களை அதிகரிக்க இக் குழு திட்டமிட்டுள்ளது இந்நிலையில் இன்று மலைமேல் இவர்களால் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு சமூக சேவை குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட செயற்கை குளத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டு இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு நீர் விடப்பட்டது.
மேலும் பாலப்பட்டி கிராமத்தை அடுத்த ராசாம்பாளையம் கிராமத்தில் உள்ள சர்வ மலையில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு அளிக்கும் விதமாக தொடர்ந்து 45 வது வாரமாக மலைமேல் கம்பு மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் உணவாக விலங்குகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மலையில் புள்ளி மான்கள் குரங்குகள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வருவதால் அவற்றின் உணவுத் தேவையை இக்குழு தங்களால் முடிந்தவரை நிறைவேற்றி வருகிறது.
144 தடை உத்தரவு நீடிப்பதால் மக்கள் இந்த சாலையின் வழியில் பயணிக்க கட்டுப்பாடுகள் உள்ளது எனவே விலங்குகளுக்கு உணவு அளிப்பது என்பது சற்று சவாலாகவே உள்ளது. ஏனென்றால் வழக்கமான நாட்களில் விலங்குகளின் உணவு தேவை பாதி மக்களால் நிறைவேற்றப்படும் இந்நிலையில் இந்த சமயத்தில் விலங்குகளுக்கு இவர்களின் மூலம் அளித்த உணவு சற்று பற்றாக்குறையாகவே உள்ளது.
இருப்பினும் இந்த குழு இயற்கை மற்றும் வன விலங்குகளின் மீது கொண்ட அக்கறையை இப்பகுதியில் உள்ள மக்கள் இந்த குழுவினை வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலம் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment