நாளை முதல் நாமக்கல் மாவட்டத்தில் கெடுபிடி அதிகரிப்பு

தடையை மீறுபவர்கள் கட்டாய  அபராதம்





நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் முக கவசம் அணிவது கட்டாயம், முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம், இருச்சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவு.




காளப்பநாயக்கன்பட்டியில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டது
ஆகையால் இந்த நிமிடத்திலிருந்து காளப்பநாயக்கன்பட்டி பஸ் நிலையத்திற்கோ அல்லது வெளியில் சுற்றவோ வேண்டாம் மீறி சுற்றினால் காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காளப்பநாயக்கன்பட்டி அம்மன் சூப்பர்மார்கெட் அருகில் உள்ள இரண்டு தெருக்களும் சீல் வைக்கப்பட்டது.







இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது இருப்பினும் இதுவரை 39 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் 11 நபர்கள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அந்த 11 நபர்கள் சேர்ந்து ஒருவர் கூடுதலாக 12 நபர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments