நாமக்கல் மாவட்டத்திற்க்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் அதிரடி
ஏப்ரல் 28 நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இருவர் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 55 ககொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 14 நபர் மட்டுமே தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதம் உள்ள நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள 14 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு கலப்பநாயக்கன்பட்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபருக்கு ஒரு நூற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் நடைபெற்ற ஊரடங்கு நீட்டிப்பது குறித்த கூட்டத்தை பற்றிய முடிவுகளை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு பகுதிக்கு கொரோனா நோய்த்தொற்று பாதித்த இடங்களைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் தங்கமணி அவர்கள் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் அயராது பாடுபட்டு வரும் காவலர் குடியிருப்பு சென்ற அவர் அங்கு வசித்து வரும் காவலர் குடும்பத்திற்குத் தேவையான மளிகை பொருட்களை இன்று அவர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் நல்ல வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு பத்திரிகையாளர்கள் பலர் ஒன்றிணைந்து தங்களாலான நிதி உதவியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி அதற்கான வழியை என்று அமைச்சர் தங்கமணியிடம் வழங்கினர்
Comments
Post a Comment