திருச்செங்கோடு நகர மக்களுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட கண்காணிப்புக்குழு

கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம்




திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் கொரோனோ தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக சேலம் மண்டல இயக்குநர் திரு.அசோக்குமார் அவர்கள் அம்மா உணவகத்தை திடீரென ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அம்மா உணவகத்தில் உணவருந்திய பிறகு தட்டுகளை வெந்நீர்ல் சுத்தம் செய்ய ₹2.50 லட்சம் மதிப்பிலான சுத்தம் செய்யும் கருவி வழங்கப்படும் என தெரிவித்தார். திருச்செங்கோடு நகரப் பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஸ்பிரேயர்கள் வாங்க உள்ளது எனவும் தெரிவித்தார்.




கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காலை முதல் மக்கள் உணவிற்காக மிக நீண்ட வரிசையில் நெடு நேரம் சமூக இடைவெளியின்றி உணவிற்காக காத்து நின்றனர் இதனால் உணவு வழங்கப்படும் பொழுது தட்டுகள் சரியானபடி கழுவாமல் மற்றும் வெந்நீர் வசதி இல்லாததால் குளிர்ந்த நீரில் கழுவப்படும் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

இந்த நாள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த் தொற்று மிக எளிதில் பரவும் அபாயம் உள்ளதால் கண்காணிப்புக்குழு சோதனைக்குப் பிறகு இரண்டரை லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதாக உறுதி தெரிவித்தனர்.




மேலும் ஊரடங்கு என்பதை மிகச் சரியான முறையில் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் அதை கடைபிடித்து வரும் திருச்செங்கோடு நகர மக்களுக்கு மற்றும் திருச்செங்கோட்டில் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு ஆய்வினை மேற்கொள்ள வந்த அதிகாரிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர் மேலும் கொரோனா எனும் இந்த கொடிய அரக்கனை திருச்செங்கோடு நகரில் இருந்து விரட்ட அயராது பாடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கள் உதவி செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்தனர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பி வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது