நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 33 பேர் டிஸ்சார்ஜ். (20.04.2020)

நாமக்கல்லைச் சேர்ந்த 33 பேர் டிஸ்சார்ஜ். (20.04.2020)





கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 நபர்கள்  இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். டிஸ்சார்ஜ்  செய்யப்பட்ட அனைவரும்  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வாகனங்கள் மூலம் இன்று நாமக்கல்லில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர்.

 முதல்கட்டமாக 6 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். அதேபோல் இன்று 33 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றனர் மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளில் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியது மகிழ்ச்சியக்கிறது என மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மீதமுள்ள 11 நபர்களை குணப்படுத்தும் முயற்சியில் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவலர் மற்றும் அமைச்சர் தங்கமணி சார்பில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது குறையும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வெளியில் பயணிக்கும் போது கட்டாயமாக முக கவசம் மற்றும் பொது இடங்களில் காய்கறிகள் மளிகை பொருட்கள் போன்றவைகளை வாங்கும் பொழுது ஒன்று முதல் இரண்டு மீட்டர் வரை சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்குமாறு அரசுத் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. 

மேலும் குணமடைந்து வீடு திரும்பிய நபர்களை உற்சாகமாக வைக்கும் விதமாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் காவலர்கள் மலர்தூவி கைதட்டி வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்