கொரோனா பாதித்தவருக்கு காய்ச்சல் மாத்திரை விற்ற மருந்தகத்திற்கு சீல் வைப்பு
காளப்பநாயக்கன்பட்டி மருந்தகத்திற்கு சீல் வைத்த வருவாய் கோட்டாட்சியர்
நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இவர் தன் கர்ப்பமாக உள்ள மனைவியை பார்க்க சென்னை போரூரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவை இரண்டு சக்கர வாகனத்தில் கடந்து வீடு வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் இவர் மனைவியை அழைத்துச் சென்று கொண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஸ்கேன் மையமான நாமக்கல் ஸ்கேன் சென்டரில் தனது மனைவியை நார்மல் செக்கப் செய்துள்ளார்.
பின்னர் இவருக்கு காய்ச்சல் ஏற்பட காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் காய்ச்சலுக்கு மருந்து வாங்கியுள்ளார் இருப்பினும் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து அதன் காரணமாக பேளுக்குறிச்சி சுகாதார நிலையம் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்
இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று சேலம் தனியார் மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இவர் தற்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சளி காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற காரணத்துடன் மருந்தகங்களுக்கு மருந்து வாங்க வருபவர்களை பற்றிய தகவலை அரசுக்கு தெரிவிக்கும் படி ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில் கலப்பநாயக்கன்பட்டி மருந்தகம் அதனை மீறி செயல்பட்டதால் நேற்று நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தார்.
மேலும் பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தடையை மீறி சிகிச்சை அளித்ததன் பேரில் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரின் கர்ப்பமான மனைவிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று நபர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மூன்று நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர் சென்று வந்த தனியார் ஸ்கேன் மையம் மற்றும் காளப்பன்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள மருந்தகம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment