கண்டம் தெறிவித்த நெட்டிசன்கள்
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மளிகை பொருட்களை வழங்கிய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்
நாமக்கல்லில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி பகுதிகளில் நாமக்கல் நகரத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நகரமாக மாற்ற பாடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இன்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களின் தலைமையில் உணவிற்கு தேவையான இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த மளிகைப் பொருட்களில் அரிசி சர்க்கரை துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்று கழக உறுப்பினர் மற்றும் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இதில் 440க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உணவு பொருட்கள் வழங்கும் சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் சரியானபடி சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. மேலும் அவர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி வரும் கட்சி உறுப்பினர்களும் சரியாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உணவுப் பொருட்களை வழங்கினர்.
தூய்மைப் பணியாளர்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசையாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தனர் ஆனால் அங்கிருந்த எந்த நாற்காலியும் சரியானபடி சமூக இடைவெளி விட்டு அமைக்கப்படவில்லை சரியானபடி சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் அப்பொருள்களை பெற்றுச் செல்லும் தூய்மைப் பணியாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய மளிகைப் பொருட்களுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்றாலும் சிலர் இவரின் இந்த செயலுக்கு "சமூக இடைவெளி எங்கே " மற்றும் "கொரோனா வைரஸ் பரவுவதை ஊக்குவிக்க வேண்டாம்" என்று சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் சார்பில் தமிழகம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் பல்வேறு உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் அவர்கள் அனைவரும் சரியான முறைப்படி சமூக இடைவெளி கடைபிடித்து தங்களது குழு மற்றும் சங்கங்களின் சார்பில் உணவுப் பொருட்களை வழங்கி வந்தனர் அவர்கள் எந்தவித விளம்பரமும் இன்றி பொருட்களை வழங்கியது குறிப்பிட்டதக்கது.
Comments
Post a Comment