ராசிபுரத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கூண்டு அமைக்கப்பட்டது

ராசிபுரத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கூண்டு அமைக்கப்பட்டது



ராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பில்  சேவை திட்டத்தின்  ஒரு பகுதியாக புதிய பஸ் நிலையம் முன்பாக உழவர் சந்தைக்கு வந்து செல்பவர்களின் பாதுகாப்பிற்காகவும், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள தற்காலிக தினசரி மார்க்கெட் வந்து செல்பவரகளின்  வசதிக்காகவும் இரு இடங்களில் கிருமிநாசினி தெளிப்பான் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.


இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். 




இதனை இன்று காலை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா கலந்துகொண்டு இதன் பயன்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  





இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பி.ஆர். சுந்தரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம் பாலசுப்பிரமணியம்,ராசிபுரம் டிஎஸ்பி., ஆர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன், ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் நடேசன், ராசிபுரம் வட்டாட்சியர் கே. பாஸ்கரன், ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் எஸ் பாலாஜி, கே எஸ் கருணாகரன் பன்னீர்செல்வம், ஜி தினகர், சிட்டி ஆர் வரதராஜன், மகாலட்சுமி பிரபு, சுரேந்திரன் அன்பழகன், நமச்சிவாயம், மஸ்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்