விலையைக் கூட்டி விற்பனை செய்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட - தமிழ்நாடு வணிகர் சங்கம்

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு






நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் அத்தியாவசிய பொருட்களான  அரிசி பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் காய்கறிகள் போன்றவைகளை விலையை கூட்டி விற்பனை செய்யப்படுவதாலும் மற்றும் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்காமல் விற்பனை செய்வதாலும் பல கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர்கள் சீல் வைக்கும் நிகழ்வு தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இதனை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு நாமக்கல் மாவட்டத்தில் கையிருப்பு உள்ளதாகவும் இது போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை கூட்டி விற்றால் சங்கங்கள் வணிகர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேலும் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் மக்களை சமூக இடைவெளியை கண்காணிக்கும் படி அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நாமக்கல் மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ள வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்துள்ளார். எனவே பொதுமக்கள் பொருட்களை மொத்தமாக வாங்கி இருப்பில் வைக்க வேண்டாம் எனவும் இவ்வாறு செய்வதனால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சில்லறை வணிகர்கள் அத்தியாவசிய பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் இருந்து முழுவதுமாக கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே டோர் டெலிவரி செய்வதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டு டோர் டெலிவரி செய்யவும் தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறி செயல்படும் வணிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கம் நிர்ப்பந்திக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா இன்று வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது