நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் 6,683 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசு அறிவித்தபடி கொரோனா தொற்று எளிதில் ஏற்படக்கூடிய தொழிலாளர்கள், செய்தித்தாள்களை போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், தெருக்களில் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மின் வணிகம், கட்டுமான தொழிலாளர்கள், அனைத்து மாநில போக...
Comments
Post a Comment