வீடு வீடாக சென்று கிருமிநாசினி பொருட்களை வழங்கிய சுகாதாரத் துறையினர்

நாமக்கல் மாவட்டம் சார்பில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டு வருகின்றன. 



இந்நிலையில் நாமக்கல்லில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான மஜித் தெருவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் தலைமையில் சுகாதார துறையினர் வீடு வீடாகச் சென்று கிருமிநாசினி பொருட்களை வழங்கினார் மற்றும் தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Comments