நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குறிப்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 - ம் தினத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் புதுமணத்தம்பதிகள் கூடி ஆடிபெருக்கு விழாவாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால், நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி (02.08.2020) ஆடி 18 -ம் நாளில், குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி வேலூர், மோகனூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பிற பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு கொரோன...