கடைகளைத் திறந்து வைக்கும் நேரத்தை தாமாகவே குறைத்துக் கொள்ளும்படி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோரிக்கை
நாமக்கல் மாவட்ட வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை செயலாளர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்திற்கு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி கடைகளை இரவு 8 மணி வரை திறந்து இருக்கலாம் என்ற உத்தரவை நாமக்கல் மாவட்ட வணிகர்கள் கொரோனா பரவும் தீவிரத்தை கருத்தில் கொண்டு தாமாகவே முன்வந்து கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளும்படி நாமக்கல் மாவட்டத்திற்கான வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும் மனிதர்களாகிய நாம் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வணிகம் செய்ய வரும் பொழுது கைகளைக் கழுவும்படியும் முகக்கவசம் அணிந்து கொள்ளவும் மற்றும் சமூக இடைவெளியை சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறார்களா என்பதை வணிகர்கள் கூர்ந்து கவனித்து அவர்களை கடைபிடிக்கும் படி அறிவிக்கும்படி அவர் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுவரை நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பை பின்பற்றி கடைகளை மாலை 5 மணி வரை திறந்து வைத்திருந்த அனைத்து வணிகர்களுக்கும் அவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்தார்.
Comments
Post a Comment