திருச்செங்கோட்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சாரைப்பாம்பு

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நன்கு வெளுத்து வாங்கியது.


இதன் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றம் காரணமாக மரம் முறிந்து கீழே விழுந்தது

இவற்றில் நேத்து திருச்செங்கோடு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அந்தப் பகுதிகளில் முழுவதும் தற்காலிகமாக மின்தடை ஏற்பட்டதால்  நீரின் அளவு அதிகரித்து நீர் தேக்கம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் உள்ள புதர் ஒன்றில் இருந்து வந்த சாரை பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

இந்நிலையில் அந்த பாம்பு இருசக்கர வாகன வெளிச்சத்தின் மூலம் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும் பரமத்திவேலூர் சூல்தான்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்று முறிந்து அருகில் உள்ள டாடா ஏஸ் வாகனத்தின் மீது விழுந்ததால் அந்த வாகனம் முழுவதுமாக சிதைந்தது.


மேலும் வல்லிபுரம்- பாலப்பட்டி சாலையில் இரண்டு இடங்களில் இயற்கை சீற்றம் காரணமாக இரண்டு மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே இருந்ததால் மக்கள் சற்று சிரமப்பட்டு அந்த இடத்தை கடந்து சென்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்