கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அஜாக்கிரதையாக செயல்படும் தேநீர் கடைகள்
தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இவற்றை தடுக்க அரசு தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல தேனீர் கடைகள் இன்று வரை கொரோனா வைரஸ் தீவிரத்தை அறியாமல் ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்ட பிறகு கொரோனாவிற்கு முன்பு இருந்த நிலையில் எவ்வாறு வியாபாரம் மேற்கொண்டார்களோ அதைப் போன்றே தற்போது வரையிலும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதாவது தேனீர் கடைகளில் தேனீர் அருந்த வருபவர்கள் கண்ணாடி டம்ளர் மூலம் தேநீர் அருந்துவது வழக்கம் இருப்பினும் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்களை பயன்படுத்தினால் கொரோனா நோய் பரவுவது ஓரளவிற்கு குறையும் என்பதை உணராமல் இன்றுவரையிலும் தேனீர் கடைகளில் கொரோனாவிற்க்கு முன்பு இருந்த நிலையை போலவே சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களில் தேநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சியர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி இருந்தாலும் சில தேநீர் கடைகள் இவ்வாறு அஜாக்கிரதையாக செயல்படுவது கொரோனா பரவுவதை ஊக்குவிப்பதாக தெரிகிறது.
Comments
Post a Comment