சென்னை மாநகராட்சி மிண்டும் சகஜ நிலைக்கு திரும்பியது

கொரோனா-க்கு முன்பிருந்த நிலையை அடைந்த சென்னை மாநகரம் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள  சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு  சில கட்டுப்பாடுகள் கூடிய தளர்வு வழங் கப்பட்டு இருப்பதால் இன்று காலை முதல் சென்னையில் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.


அதாவது அரசு தெரிவித்திருப்பது என்னவென்றால் 50 சதவீத பணியாளர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் மற்றும் ஹோட்டல்களில் பார்சல் மட்டும் என பல்வேறு விதிமுறைகளை விதித்து ஊரடங்கு தளர்வினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.


இந்நிலையில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய ஊரடங்கு தளர்வு முதல் நாளான இன்று மக்கள் மிக வேகமாக வெளியில் வந்து நடமாட ஆரம்பித்து விட்டனர். 

இதனை பார்க்கும் பொழுது சென்னை மாநகரம் கொரோனாக்கு முன்பு இருந்த நிலையை போல தற்பொழுது காட்சியளிக்கிறது இதனால் தற்போது சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


 தற்பொழுது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை சரியான முறையில் மக்கள் கடைபிடிக்காமல் இவ்வாறு செயல்படுவதால் மூலம் கொரோனா பரவுவதை மேலும் ஊக்குவிப்பதாக தோன்றுகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்