புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் கண்காணிப்பாளர்க்கு வாழ்த்து தெரிவித்த வணிகர் சங்க உறுப்பினர்கள்

சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் காவல் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு இதுவரை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு அருளரசு அவர்கள் தற்போது கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு சக்தி கணேஷ் அவர்கள் இதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்