நாமக்கல் லாரி ஓனர் அசோசியேசன் சங்கம் சார்பில் மத்திய அரசிடம் வேண்டுகோள்
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஸ்கிராபிங் பாலிசி எனப்படும் 15 வருடத்திற்கு மேலான பழைய வாகனங்கள் இந்த மாத இறுதியில் இருந்து இயக்குவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி கால கட்டத்தில் மத்திய அரசு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்தது லாரி உரிமையாளர்கள் மேலும் நஷ்டத்திற்கு உள்ளாக்கும் என்பதால் இந்த ஸ்கிராபிங் பாலிசி என்பதை மறுபரிசீலனை செய்யும்படி சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தற்போது உள்ள நெருக்கடி நிலை காரணமாக சரியாக லோடு கிடைக்காததால் மார்க்கெட்டில் உள்ள 50% வாகனங்கள் மட்டுமே தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்கிராபிங் பாலிசியை அறிமுகப்படுத்தினால் மேலும் ஒன்றரை லட்சம் லாரிகள் வேலையின்றி நிற்கும் அவலம் ஏற்படும் என்பதால் ஒன்று அல்லது இரண்டு வண்டிகளை மட்டும் வைத்து பிழைப்பு நடத்தும் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் அரசு இதனை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருடம் முதல் BS6 எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ரக லாரிகள் தற்பொழுது மார்க்கெட்டில் வந்துள்ளதால் ஸ்கிராபிங் பாலிசி மூலம் அரசு நிர்ணயித்த விலைக்கு லாரிகளை கொடுத்துவிட்டு தற்போது விற்கப்படும் BS6 ரக லாரிகள் முந்தைய விலையை விட தற்போது 20 சதவீதம் கூடுதலாக விற்கப்படுவதால் இது புதிதாக லாரி வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்காது என்பதால் ஸ்கிராபிங் பாலிசி 15 வருடம் என்பதை 20 வருடமாக மாற்றித் தரும்படி நாமக்கல் மாவட்ட லாரி ஓனர் அசோசியேசன் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment