நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது
நாமக்கல் மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக 12 ஆக இருந்தது இந்நிலையில் இன்று கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 47 என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை கண்டு மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கொரோனா நோய் பாதித்தவர்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது தற்போது நாமக்கல் மாவட்டம் மெல்ல மெல்ல கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் பட்டியலில் தொடர்ந்து முன்னோக்கி பயணித்து வருகிறது.
இந்நிலையில் இன்று உச்சகட்ட அதிர்ச்சியாக ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இந்த நெருக்கடி காலத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் முக கவசம் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்கும்படி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இன்று ஆறுதல் தரும் தகவலாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஐந்து நபர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் அவர்கள் இன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments
Post a Comment