குமாரபாளையத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்களுக்கு பூட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நேற்று முழு ஊரடங்கு மீறி விசைத்தறி கூடங்கள் செயல்பட்டதாக கூறி விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கு அபதாரம் விதிப்பு.


தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவது தற்பொழுது தீவிரமடைந்துள்ளதால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதில் பல்வேறு முயற்சிகள் தற்போது எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை கடைபிடிக்கும் படி உத்தரவிட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு பல பகுதிகள் கடைபிடிக்கப்பட்ட பொழுதிலும் குமாரபாளையம் பகுதியை அடுத்த குளத்து காடு சின்னப்பநாயக்கன்பட்டியை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 41 விசைத்தறி கூடங்களுக்கு நகராட்சி அலுவலர்கள் நேரில் சென்று விசைத்தறி கூடங்களுக்கு அபதாரம் விதித்தார்.

Comments