திருச்செங்கோடு சூரியாம்பாளையம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி அடுத்த சூரியம்பாளையம் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று செய்யப்பட்டதால் அப்பகுதி இன்று சுகாதாரத்துறையினர் கைப்பற்றி அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் கொரோனா தொற்று நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் பரவுவது வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் மூலம் அதிகமாக பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment