தனியார் நிறுவனத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் ரூபாய் 5000 நிதியுதவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இன்று தனியார் நிறுவனம் சார்பில் ரூபாய் 5000 நிதியுதவி வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சியில் கொரோனா காலகட்டத்தில் திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் சிறப்பாக பணியாற்றிய 16 நபர்களுக்கு இன்று கிறிஸ்டி எனும் தனியார் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 5000 இன்று ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன்.சரஸ்வதி அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் அவர்கள் மற்றும் கிறிஸ்டின் நிறுவனர் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு கொண்டனர்.
நிதியுதவி பெற்று சென்ற அம்மா உணவக ஊழியர்கள் தங்களது நன்றியை நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment