புதுசத்திரத்தில் கைபேசி வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட பெண்

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் பகுதியில் கணவர் கைபேசி வாங்கி தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் இந்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சத்திரம் இலக்கிய பட்டியைச் சேர்ந்த பரிமளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஊள்ளது இவர் தனது உறவினருடன் உரையாட தன் கணவரிடம் புதிய மொபைல் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

 இந்நிலையில் அவர் கணவர் புதிய மொபைல் வாங்கி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு புதிய மொபைல் வாங்கி தரும்படி மனைவி தொடர்ந்து கேட்க அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த மனைவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments