நாமக்கல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பார்த்தவர்களின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாமக்கல் நகராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதாவது இந்த கொரோனா பேரிடர் கால கட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தருவதை பெரும்பாலும் குறைத்துக் கொள்ளும்மாறு நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 பொதுமக்கள் சொத்துவரி தொழில்வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டண வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கட்டுவதற்காக நேரடியாக நகராட்சி அலுவலகத்திற்கு வருகை புரியாமல் ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது பணிகளை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்ளுமாறு நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்