தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் நாமக்கல் மாவட்டம் கடைசி இடம்
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு இவற்றைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை தற்போது எடுத்து வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பில் தற்பொழுது கடைசி இடத்தில் நீடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது கொரோனவைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த காலகட்டமான ஏப்ரல் மார்ச் போன்ற மாதங்களில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் ஒரு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 77 நபர்களாக இருந்தனர் அப்பொழுது நாமக்கல் மாவட்டம் தமிழக அளவில் ஏழாம் இடத்தில் நீடித்தது.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களின் சரியான பொறுப்புணர்வுடன் செயல்பட்டதால் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுவது குறைந்து தற்பொழுது கடைசி இடத்தை தமிழக அளவில் நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது.
தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டாலும் கொரோனோ வைரஸ் புதிதாக பாதித்தவரின் எண்ணிக்கை தற்போது நாமக்கல் மாவட்டத்தில் குறைந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 113 ஆகவும் குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 90 ஆக்டிவிடீஸ் எனப்படும் சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 22 ஆகவும் இழப்பு ஒன்றும் என்ற விகிதத்தில் தற்போது நாமக்கல் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து வருகிறது.
Use full information
ReplyDelete