நாமக்கல்லில் போலி பத்திரிக்கையாளர் கைது

நாமக்கல்லில் தான் பத்திரிக்கையாளர் என்று அறிமுகப்படுத்தி பணம் பறித்து வந்த நபர் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.



நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வட்டார போக்குவரத்து பணிபுரியும் நித்தியா நேற்றைய தினம் விபத்தில் சிக்கிய ஒரு வாகனத்தை ஆய்வு செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த விஸ்வநாதன் என்பவர் தான் ஒரு மாத இதழ் பத்திரிக்கையாளர் அதில்தான் பணிபுரிவதாக கூறி ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு அந்த ஆய்வு ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அவரை விசாரித்ததில் அவர் போலி பத்திரிக்கையாளர் என தெரியவந்தது இந்நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments