உலக அளவில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் மூன்றாம் இடத்தை பிடித்த இந்தியா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இந்நிலையில் உலக அளவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் 10 இடங்களில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி தினசரி நாளொன்றிற்கு கொரோனா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 15 ஆயிரத்தை தொட்டுள்ளது அதிகபட்சமாக ஒரே நாளில் 24 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இந்நிலையில் உலக அளவில் கொரனோ நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் தினசரி ஒன்றிற்கு இங்கு சராசரியாக 25 மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றன அதிகபட்சமாக 55,000 மக்கள் ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தற்போது இறப்பு சதவீதம் அமெரிக்காவில் குறைந்தாலும் கொரோனா நோய் பரவும் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரண்டாம் இடத்தில் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு தற்போது கொரோனா  அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வகிக்கிறது வகிக்கிறது.


இந்த நாட்டில் நாளொன்றுக்கு 43 ஆயிரம் நபர்கள் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நாட்டில் இறப்பு விகிதம் முந்தைய நிலையை ஒப்பிடும் போது தற்பொழுது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இந்தியா தற்பொழுது இருந்து வருகிறது இந்தியா மற்ற நாடுகளை  ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது அதாவது தற்பொழுது நாளொன்றிற்கு இந்தியாவில் 25 ஆயிரம் மக்கள் நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றன இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் கூட நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருவதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.

Comments