திருச்செங்கோட்டில் மக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வினியோகம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் திருக்கோவிலில் இன்று பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.


பொதுமக்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தும் வகையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன்.சரஸ்வதி அவர்கள் இன்று பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான கபசுர குடிநீர் இன்று பொது மக்களுக்கு வழங்கினார்.


மேலும் கொரோனா வைரஸ் தற்பொழுது தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசியமற்ற பயணங்களை ரத்து செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும் திருச்செங்கோடு நகராட்சி கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நகராட்சியாக மாற்ற பாடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் போன்றவர்களுக்கு தங்களது நன்றியை அவர் தெரிவித்தார்.

Comments