கொரோனா நோய் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பவித்திரம் கடைவீதி சாலை
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி பகுதியை அடுத்த பவித்தரம் பகுதியில் இன்று இருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது
இதனையடுத்து இந்த பகுதி தற்போது சுகாதாரத்துறையினர் கைப்பற்றி வெளியாட்கள் யாரும் உள்ளே வராத மாதிரி தடுப்புகளை அமைத்தனர். மேலும் இப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிகப்பட்டு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment