நாமக்கல் மாவட்டத்தில் வேலையின்றி முற்றிலும் முடங்கிய மெக்கானிக் பட்டறைகள்
கொரோனா நோய் தொற்று காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தொழில் முடக்கம்
கொரனோ நோய்த்தொற்று தற்பொழுது இந்தியா முழுவதும் தீவிரமடைந்து வருவதால் இந்தியாவில் சரக்கு போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்த லாரிகள் தற்போது வேலையின்றி முடங்கி கிடக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் லாரி உரிமையாளர்கள் தற்பொழுது கடுமையான நெருக்கடி உடன் தொழில் செய்து வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் 70 சதவீத மக்களின் முக்கியத் தொழிலாக பார்க்கப்பட்டு வரும் லாரி மெக்கானிக் தொழில் தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் மெக்கானிக் வேலைகள் சிறிதளவில் தற்போது நடைபெற்று வருகிறது இருப்பினும் கொரோனாவிற்கு முன்பு இருந்ததைப் போல் தற்பொழுது வேலை இல்லை என பல லாரி மெக்கானிக் பட்டறை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் குறைந்தபட்ச வருமானத்துடன் தங்களது குடும்பங்களை நடத்தி வருவதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment