அமைச்சர் தங்கமணி அவர்களின் நாமக்கல் அலுவலகம் மூடப்பட்டது
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை மக்கள் குறைதீர்ப்பு கூட்ட அலுவலகமான நாமக்கல்லில் உள்ள அலுவலகம் இன்று மூடப்பட்டது.
மேலும் கொரனோ பாதிப்பில் நாமக்கல் மாவட்டம் தற்போது கடைசி இடத்தில் உள்ளதால் இன்று நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என செய்தியாளர்கள் பலர் எச்சரித்துள்ளனர்.
எனவே பொது மக்களாகிய நாம் நமது பாதுகாப்பை உறுதி செய்ய நாம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
அதாவது முகக்கவசம் கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment