அட்டகாசமான புதிய இரண்டு திட்டங்களை அறிவித்த புதிய நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்தி கணேசன் அவர்கள் நாமக்கல் மாவட்ட முதியோர் மற்றும் பெண்களுக்கு அட்டகாசமான இரண்டு திட்டங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.



 நாமக்கல் மாவட்ட முதியோர்கள் பயன்பாட்டிற்கு (HELLO SENIORS) - ஹலோ சீனியர்ஸ் மற்றும் பெண்கள் பயன்பாட்டிற்கு (LADIES FIRST) - லேடீஸ் ஃபர்ஸ்ட் ஆகிய இரண்டு திட்டங்கள் துவக்கம்.

  இன்று  14.07.2020-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்காக (HELLO SENIORS) ஹலோ சீனியர்ஸ் மற்றும் பெண்களுக்காக ( LADIES FIRST ) லேடீஸ் ஃபர்ஸ்ட் ஆகிய இரண்டு திட்டங்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்தி கணேசன், அவர்கள் துவக்கிவைத்தார்.



  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் தங்களது வயது மூப்பின் காரணமாகவும், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் அவர்களது பிரச்சனைகளை உரிய அலுவலருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று  உரிய நிவாரணம் தேட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் “ HELLO SENIORS” ஹலோ சீனியர்ஸ் என்ற திட்டம் 9994 7171 10 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சனை உள்ள முதியோர்கள் தங்களது பிரச்சனைகளை உரிய அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் தேட இயலாத சூழ்நிலையில் 9994 7171 10 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.


 மேலும், பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் 9894 5151 10 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டு “LADIES FIRST” என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்சனைகள் குறித்து 9894 5151 10 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தால் காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். 


  மேற்கண்ட இரு திட்டங்களிலும் புகார் செய்பவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த எண்கள் 24 X 7  பயன்பாட்டில் இருக்கும். புகார் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள் புகார்தாரருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும். மேலும், முதியோர்களும் பெண்களும் தங்களுக்கு எற்படும் பிரச்சனைகள் குறித்து இத்திட்டங்களின் மூலம் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். 

இந்த எண்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். இதனை முதியோர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்தி கணேசன், அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்