நாமக்கல் மாவட்டத்தில் இன்று மேலும் 5 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த நிலையில நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 118 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஐந்து நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதில் இருவர் பரமத்தி வேலூர் பகுதியை அடுத்த பில்லூர் ஊராட்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments
Post a Comment