சமூகசேவை குழுவின் சார்பில் திருச்செங்கோட்டில் மரம் நடும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்துவரும்  தேடல் எனும் சமூக சேவை குழு சார்பில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தேடல் சமூக சேவை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் சமூக இடைவெளியுடன் நட்டனர்.


நாமக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் தட்பவெப்பநிலை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக மேலும் மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதன் காரணமாக மரக்கன்றுகளை நடும் நோக்கில் தற்போது இறங்கியுள்ளது. இதன்மூலம் நாமக்கல் மாவட்டம் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Comments