நாமக்கல் மாவட்டத்தில் உச்சகட்ட அதிர்ச்சி இன்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 16 நபர்களுக்கு கொரோனா உறுதி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த நிலையில நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது மொத்தம் 147 ஆக அதிகரித்ததுள்ளது.
இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 16 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதில் பலர் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ஏசியன் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டத்தின் மேற்குப் பகுதியான நன்செய் இடையாறு, பாலப்பட்டி ஓலப்பாளையம் வளையப்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து அதிக மக்கள் இந்த தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அவர்கள்.
Comments
Post a Comment