நாமக்கல் மாவட்டத்திற்க்கு ஊரடங்கு நேர கட்டுப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவும் தீவிரத்தை கருத்தில் கொண்டும், அதனை கட்டுப்படுத்த உதவும் நல்லெண்ணத்திலும் மாவட்ட நிர்வாகத்தோடு கலந்து பேசி அனைத்து வணிக நிறுவனங்களையும் (உணவகம் தவிர்த்து) மாலை 5 மணிக்கு அடைப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. வணிகர் சங்கத்தினரின் இந்த முடிவை நமது மாவட்ட ஆட்சியரும் வரவேற்று அதனை 22/06/2020 அன்று அறிவிப்பாக வெளியிட்டார்.


இந்த அறிவிப்பை மாவட்டம் முழுக்க உள்ள 75% வணிகர்கள் மக்கள் நலன் கருதி முறையாக இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர். எனினும் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சில வணிகர்கள், இந்த கட்டுப்பாட்டை ஏற்காமல் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேலும் கடைகளை திறந்துவைத்து வணிகத்தை தொடர்ந்து வருகின்றனர்.


இது தொடர்பாக இன்று 10/07/2020 காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நேர கட்டுப்பாடான இரவு 8 வரை என்கிற உத்தரவை கடைபிடித்து வணிகர்கள் தங்கள் வணிகத்தை தொடரலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்


அதே சமயம் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளி பின்பற்றுவது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வணிகத்தை பாதுகாப்புடன் தொடர வேண்டும் எனவும், இதில் விதிமீறல்கள் இருப்பின் மாவட்ட நிர்வாகம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.


மக்கள் நலனை கருத்தில் கொண்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தரும் வகையிலும், தமிழக அரசு விதித்துள்ள இரவு 8 மணி வரை என்கிற நேரக்கட்டுப்பாட்டை, தாங்களாகவே முன்வந்து குறைத்துக்கொண்டு வணிகம் செய்ய விரும்பும் சங்கங்கள் முறையாக உறுப்பினர்களின் சம்மதம் பெற்று தொடர்ந்து செயல்படுத்தலாம்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் வேண்டுகோளை ஏற்று, இதுவரை மாலை 5 மணிக்கு கடைகளை அடைத்து ஆதரவளித்த அனைத்து வணிக பெருமக்களுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நன்றியை தெறிவித்தனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்