பாலப்பட்டி சாலையில் அதிக பாரத்துடன் நிலைதடுமாறி சென்ற கனரக வாகனம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த பாலப்பட்டி சாலையில் அதிக பாரத்துடன் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணித்த டாட்டா ஏஸ் ரக வாகனம்.
பாலப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மக்களால் செய்யப்படும் விவசாய தொழிலான கோரை மற்றும் வெற்றிலை இப்பகுதியில் அதிகம் இந்நிலையில் இன்று காலை கோரை புற்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏஸ் எனப்படும் கனரக வாகனம் அளவுக்கு அதிகமான பாரத்துடன் சாலையில் நிலை தடுமாறிக் கொண்டே சென்றதால் அப்பகுதி வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

மேலும் எதிர் திசையிலிருந்து வருபவர்களுக்கும் இது ஆபத்தை விளைவிக்கும் வகையில் சென்றதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமப்பட்டு  அந்த வண்டியை கடந்து சென்றனர்.

அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை விபத்து ஏற்படும் என்ற இதை கருத்தில் கொள்ளாமல் பல வாகன உரிமையாளர்கள் இவ்வாறு அலட்சியமாக செயல்படுவது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments